குளவிக் கொட்டு – 7 மாணவர்கள் பாதிப்பு! பாடசாலைக்கு பூட்டு! குளவிக்கூடுகள் எரிப்பு!!

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய மாணவர்கள் எழுவர் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கையில், பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மரத்தில் இருந்த குளவி கூட்டினை, கழுகு மோதியமையினால் குளவி கூடு கலைந்தது.

குளவி கொட்டியதில் எல்பட தமிழ் வித்தியாலயத்தில் ஒரு மாணவனும், ஐந்து மாணவிகளும், பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒரு மாணவி உட்பட மொத்தம் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 11 இல் கல்வி பயில்கின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து ஹட்டன் வலய கல்வி பணிமனை பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பாடசாலை ழூடப்பட்டுள்ளது என எல்பட தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் தியாகராஜன் தெரிவித்தார்.

இதேவேளை சம்பவத்தை அறிந்த பிரேதேச மக்கள் மரத்தில் இருந்த குளவி கூடுகளை தீ வைத்து அழித்துள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles