குழந்தைகளை விகாரையில் விட்டுவிட்டு தலைமறைவான தாய் கைது!

தமது இரண்டரை வயது நிரம்பிய பெண் குழந்தையையும், ஐந்து மாதங்களைக் கொண்ட  ஆண் சிசுவையும் விகாரை மண்டபத்தில் வைத்துவிட்டு, தலைமறைவாகிய 28 வயதுடைய இளம் தாயை, கொஸ்லந்தைப் பொலிஸார் (01-08-2020) இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

கொஸ்லந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்ட இரு குழந்தைகள் கொஸ்லந்தை அரசினர் மருத்துவமனையின் விசேட அறையொன்றில் வைத்து,தற்போது பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட இளம்பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கினார்.

“தான் திருமணம் செய்து கணவனின் வீட்டிலேயே இருந்துவந்தேன். அந்நிலையில் எனது கணவனுக்கும் எனக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு,கணவனுடன் தொடர்ந்து வாழமுடியாத நிலை,எனக்கு ஏற்பட்டது.

எனதும்,குழந்தைகளதும் பாதுகாப்புகருதி,எமது ஊர் விகாரைக்குச் சென்று இரவுதங்கினேன். மறுதினம் அதிகாலை குழந்தைகள் நித்திரையிலிருக்கும் போது,குழந்தைகளைவிட்டுவிட்டுசென்று, நிக்கபொத்தை என்ற இடத்தில் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தேன். பொலிசார் என்னைத் தேடிவந்து கைதுசெய்தனர்.

எனதுகணவனுடன் வாழமுடியாதலாலேயே, இவ்வகையில் செயற்பட்டேன்”என்றார்.

இதையடுத்து, இப் பெண்ணின் கணவரையும் கைதுசெய்யபொலிசார் நடவடிக்கைஎடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்ணை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யஏற்பாடுகளை செய்திருப்பதாக,கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவிததார்.

எம். செல்வராஜா, பதுளை நிருபர்

Related Articles

Latest Articles