குழந்தைகள் செல்போன் பயன்படுத்த சுவீடனில் தடை!

இன்றைய நவீன உலகில் செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர்.

அதேசமயம் செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இதனால் சுவீடனில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம்.

13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles