கொழும்பு – கிராண்ட்பாஸ், சமகிபுர மாடிவீட்டுத் தொகுதியின் மூன்றாம் மாடியிலிருந்து ஒன்றரை வயது ஆண் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியதில், கீழே விழுந்த குழந்தை பலியாகியுள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குழந்தையின் மாமா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை நித்திரையில் இருந்த போது வீட்டுக்கு வந்த சந்தேக நபர், திடீரென ஒரேயடியாக குழந்தையை தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான குழந்தையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது, உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் மாமா மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் எனவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.










