கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை- கணவனும் மருத்துவமனையில் அனுமதி

ஹொரணை -அங்குருவாதொட்ட-ரெமுன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை அரச மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக தமது மருமகனால் இருவரும் தாக்கப்பட்டுள்ளதுடன், இதில் 58 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அங்குருவாதொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் 36 வயதுடைய கபுஹேன, கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தியதாக கருதப்படும் ஆயுதம் மற்றும் சந்தேகநபர் வந்த உந்துருளி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை நாளை (01) ஹொரணை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles