கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் தமது கட்சி பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தேசிய வளங்களை விற்பனை செய்வதற்காக எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். பிழைகள் இருப்பின் திருத்தப்படும் எனவும் அவர் கூறினார்.