சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்தவாரம் முதல் வாரத்தில் விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பிரேரணை தோற்கடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.










