‘ கைதிகள் விடுதலை’ – நாமலின் அறிவிப்புக்கு செந்தில் தொண்டமான் வரவேற்பு

” சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதென்பதுடன் அரசாங்கத்தின் நல்லிணக்க நகர்வுகளுக்கு சிறந்ததொரு உதாரணமாகவும் உள்ளது.” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் என்ற வகையில், இக்குழு பலமுறை கூடியுள்ளதுடன், தேசிய நல்லிணக்கத்துக்கான செயல்பாடுகளை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ச  காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு பாராளுமன்றில் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயத்தை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் என்ற ரீதியில் முழுமையாக நான் வரவேற்கின்றேன். இதுவொரு ஆரோக்கியமான அறிவிப்பாகும்.

அரசாங்கமானது நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக பல முன்னுதாரணமான செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக தற்போது அரசியல் கைதிகளின் விவகாரத்திலும் கவனம் செலுத்தியுள்ளது. விரைவில் காரணமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை 2010 ஆம் ஆண்டு முதல் இ.தொ.கா சார்பில் நான் வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செயற்வதற்காக அரசாங்கம் மற்றும் நீதி அமைச்சின் ஊடாக அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக வாரியத்தின் இயக்குனர் என்ற வகையில் வரவேற்க தக்க விடயம் ” என்றும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles