யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 43 கையடக்க தொலைபேசிகளும் 5 கிராம் 250 மில்லி கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நால்வரே திருட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
