பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பஸ்ஸில் 25 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும், 9 பேர்வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
காயமடைந்த மாணவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.
செ.தி.பெருமாள்










