கொங்ரீட் வளையம் சரிந்து விழுந்து மாணவன் பலி: சந்தேக நபர்களுக்கு மறியல்

மஸ்கெலியா, காட்மோர் பகுதியில் கொங்ரீட் வளையம் சரிந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேநகபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் எஉத்தரவிட்டுள்ளார்.

மஸ்கெலிய – காட்மோரிலுள்ள பாடசாலை வளாகத்திற்குள் அனுமதியின்றி கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கொங்ரீட் வளையம் சரிந்து 11 வயதான மாணவன் உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்மோரிலுள்ள பாடசாலையொன்றில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

கட்டுமான பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட கொங்ரீட் வளையம் சரிந்ததில் அதற்குள் சிக்கி நேற்று முன்தினம் (04) மாணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles