கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் சின்ன டிரேட்டன் பிரிவு, கே.ஒ பிரிவு, ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் இருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி இருவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் இருவரும் அம்பாறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles