கொட்டகலை நகரில் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவந்த வீட்டை நேற்று சுற்றிவளைத்த பொலிஸார், 240 மில்லிகிராம் ஹெரோயினையும், 15 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான சூத்திரதாரி தலைமறைவான நிலையில் அவரது மனைவியும், போதைப்பொருள் வாங்கவந்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, பத்தனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இவ்வியாபாரம் இடம்பெற்றுவந்துள்ளது எனவும், வீட்டைசூழ நவீனரக கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளே திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்