கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை

தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடர் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது தீபாவளியை இலக்கு வைத்து பல்வேறு தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் இடம்பெற்றது.

குறிப்பாக கொட்டகலை நகரில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் அதை தடுக்கும் முகமாக நகர வர்த்தகர்களின் பங்களிப்பில் 32 சிசிரிவி கமாராக்களை நகரம் முழுவதும் பொருத்தவும் அதனை 24 மணித்தியாலமும் கண்காணிக்க திம்புள பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதை தவிர இக்கலந்துரையாடலில் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், ஒவ்வொரு போயா தினத்தன்றும் அனைத்து கடைகளையும் மூடவேண்டுமெனவும்,கல்வி தரத்தை அதிகரிக்கவும்,நகரில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றவும் மற்றும் மேலதிக வகுப்புக்கு செல்லும் மாணவர்களை கண்காணிக்க புதிய குழு உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் , கொட்டகலை சுகாதார பரிசோதகர்,திம்புள பத்தனை பொலிஸ் அதிகாரி உட்பட நகர வர்த்தகர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நீலமேகம்பிரசாந்த்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles