கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்

கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க மலவிகே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல், மருத்துவ அறிவியல் பீடத்தின் பேராசிரரியரான நீலிக்க மலவிகே, சிலரின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுடன் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமானது எனவும் அவர் தெரவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மக்கள் ஆரோக்கியமான உணவுகளைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும் எனவும், மரக்கறி, பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் தினந்தோறும் உடல் பயிற்சிகளை செய்வதுடன் உடலில் விற்றமீன் டி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

விற்றமின் டி என்பது கொரோனா வைரசை எதிர்த்து சிறந்த முறையில் செயற்படுவது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதால், கொவிட் 19 வைரசிற்கு எதிரான ஒரு வியூகமாக இதனை முன்னெடுக்க வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles