கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளது.
வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தியாலயத்தில் 15 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின.
இதன்படி 15 மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரவுள்ளன.
இவ்வாறானதொரு நிலையிலேயே சுகாதார பாதுகாப்பைக்கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
