இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 16ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 70 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 19 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.