அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது. இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது அமைச்சின் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.
எனவே, கடந்த 20 ஆம் திகதி முதல் தன்னுடன் பணியாற்றிய அரச ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நபர்கள் உட்பட அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கோரிகயுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்திலும் பந்துல பங்கேற்றார். ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.











