கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி தேசிய இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், டொனால்ட் ட்ரம்ப் ஆரோக்கியமாக இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதற்கே ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஒக்ஜன் தேவைப்படவில்லை என்றும், அவர் திடமாக இருப்பதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.