கொரோனா பரவலை தடுக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பரவலை தடுக்க வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும்.
உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி.
காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.” – என தெரிவிக்கப்பட்டுள்ளது.










