‘கொரோனா தடுப்பு பொறிமுறையை தோல்வியடைய விடமாட்டோம்’

” கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும்  பொறிமுறை தோல்வியடையவில்லை.அவ்வாறு தோல்வியடைய விடவும்மாட்டோம்.எந்தவொரு தகவலையும் நாம் மறைக்கவும் இல்லை.” – என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் மறைக்கவில்லை. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைத்தகையோடு ஊடகங்கள்வாயிலாக அவற்றை வெளிப்படுத்திவருகின்றோம்.சிலவேளை தாமதம் ஏற்பட்டால்கூட அங்கு ஒளிவு – மறைவு என்பதற்கு இடமிருக்காது.இலங்கையில் திறமையான ஊடகவியலாளரகள் இருப்பதால் அவ்வாறு எதனையும் மறைக்கவும் முடியாது.

கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பம் முதலே சிறப்பான முறையில் கட்டுப்படுத்திவருகின்றோம். நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றையும் கருத்திற்கொண்டே தற்போது செயற்படுகின்றோம்.

மினுவாங்கொட கொத்தணி 3 ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையுடன் கட்டுக்குள் வந்துள்ளது. பேலியகொட கொத்தணி பரவல்தான் நாடடின் ஏனைய பகுதிகளிலும் வியாபித்தது. அதனையும் கட்டுப்படுத்திவருகின்றோம். எனவே, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எமது செயன்முறை ‘பெயில்’ இல்லை (தோல்வி அடையவில்லை). என்றும் நாம் பெயில் அடைந்தது இல்லை. அடையவும் மாட்டோம்.

நாட்டில் சிறந்த தலைவர் இருக்கிறார். அரசாங்கமொன்று இருக்கின்றது. செயலணி இருக்கின்றது. ஓய்வுபெற்ற அதேபோல வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றனர். எனவே, நாம் தோல்வியடையமாட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles