கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி

கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.

தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த மாத்திரையை பயன்படுத்தும் முதல் நாடானது பிரித்தானியா ஆகும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 87 இலட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles