கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்தார்.
எனவே, பாடசாலைகளை எப்போது மீள திறப்பது என்பது தொடர்பில் 7 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அதுவரையில் நாளாந்தம் நிலைமை மீளாய்வு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.