தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கம், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, நல்ல நிலையில் இருக்கின்றது என்று வனஜீவராசிகள் அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.
குறித்த சிங்கத்துக்கு இருந்த ஏனைய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் ‘நெகடிவ்’ என வெளிவந்துள்ளது. இன்றுமொரு பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மருந்துகள், தெஹிவளை மிருக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மிருக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கும் வழங்கப்படும் என வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
தெஹிவளை மிருக்காட்சி சாலையில் இருந்த சிங்கமொன்றுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
