கொலையில் முடிந்த கோழிப் பிரச்சினை – யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் நேற்று இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

சுன்னாகம், கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திர நாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கத்திக் குத்து நடத்தப்பட்டது. கத்திக் குத்துக்கு இலக்காகியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கத்தியால் குத்திய நபரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின் வீட்டுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலைக்கு வழிவகுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Related Articles

Latest Articles