ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கஉரைமீதான விவாதத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. அரசின் கொள்கை திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதியின் இந்த அக்கிராசன உரையையும் சஜித் அணி புறக்கணித்திருந்தது. சபைக்கு வரவில்லை.
இந்நிலையில் கொள்கை விளக்க உரைமீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இன்று ஆரம்பமானது. இன்றைய சபை அமர்விலும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை.
ஜனாதிபதியின் உரையை எதிர்த்து சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த சுதந்திர மக்கள் கூட்டணி, விவாதத்தில் பங்கேற்றிருந்தது.










