கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்ப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே வருவதைத் தவிர்த்து, வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவிடுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles