கொழும்பில் ஆட்சியை பிடிக்க பிரதான இரு கட்சிகளும் கங்கணம்!

கொழும்பு மாநகரசபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பும், பிரதான எதிரணியும் அறிவித்துவருவதால் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.

இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபை பிரதான சபையாகக் கருதப்படுகின்றது.

இம்முறை நடைபெற்ற தேர்தலில் அச்சபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.

ஆட்சியமைப்பதற்கு 59 ஆசனங்களை பெறவேண்டிய நிலையில் தேசிய மக்கள் சக்தி வசம் 48 ஆசனங்களே உள்ளன. சில கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனையடுத்தே கொழும்பு மாநகர சபையில் தமது கட்சி ஆட்சியமைப்பது உறுதியென தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகரசபையில் 29 இடங்களைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, 13 இடங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி , 5 இடங்களைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 4 இடங்களைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் ( உள்ளிட்ட தரப்புகளின் ஆசியுடன் ஆட்சியமைக்க முயற்சித்துவருகின்றது.

இந்நிலையில் தமது அணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்குரிய வாக்கெடுப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles