‘கொழும்பில் ஐவருக்கு மிகவும் ஆபத்தான கொரோனா தொற்று உறுதி’

இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் அதிக வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொரோனா திரிபு தொற்று உறுதியான ஐவர் தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேற்படி திரிபானது இலங்கையில் தற்போது பரவிவரும் B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது எனவும், கொவிட் – 19 தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்குகூட இது தொற்றக்கூடும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் இதற்கு முன்னர் டெல்டா திரிபுடன் இருவர் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தனர். இதனால் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை. எனினும், தற்போது அடையாளம் காணப்பட்ட ஐவரும் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles