கொழும்பில் காணாமல் போன மூன்று சிறுமியர்! தேடியலையும் பெற்றோர்

கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று (08) காலை 10 மணி முதல் இந்த சிறுமியர் கொழும்பில் சில இடங்களுக்குச் சென்றுள்ளதாக குறித்த சிறுமியரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.00 – 9.30 மணியளவில் ராஜகிரிய பிரதேசத்தில் இவர்களைக் கண்டதாக குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்

Related Articles

Latest Articles