கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது எனவும், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் கூறியவை வருமாறு,
” கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டிய, நாராஹேன்பிட்டிய, கொட்டாஞ்சேனை, மட்டக்குளிய மற்றும் மோதரை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வாழும் தமிழ் மக்களை இலக்கு வைத்து, மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது.
சிங்கள மொழி ஊடாகவே விண்ணப்பம் வழங்கப்படுகின்றது. தமிழ் மொழி இல்லை. இது அரசமைப்பை மீறும் செயல்?
நாட்டில் தற்போது போர் இல்லை. பயங்கரவாதம் இல்லை. எதற்காக இந்த பதிவு? கிராம சேவகர்களின் வேலையை பொலிஸார் செய்யக்கூடாது. இந்த பொலிஸ் பதிவு நிறுத்தப்பட வேண்டும். ” – என்றார்.










