கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (20) 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 4 பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles