புத்தாண்டை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இன்று (02) முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
பஸ்களில் நெரிசலை தவிரிப்பதற்கு சாரதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளாா்.
மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஏ.எஸ்.பி. வீரசூரிய தெரிவித்தார்த்துள்ளாா்.
