கொழும்பு மாநகரசபைக்கு முஜிபூர் ரஹ்மானை களமிறக்கியது சஜித் அணி!

கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.

கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்துக்கு இது தொடர்பில் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரியப்படுத்தியுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக எம்.பி. பதவியை முஜிபூர் ரஹ்மான் இராஜினாமா செய்யவுள்ளார்.

 

Related Articles

Latest Articles