கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாவோரை குணப்படுத்தும் வகையில், முதல் தடவையாக மருந்து வில்லையொன்று அமெரிக்காவின் மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட் தொற்றை குணப்படுத்தும் மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.
இதன்படி “மொல்னுபியவியர்” என்ற பெயரிலான மருந்து வகையை கொவிட் தடுப்பிற்குப் பயன்படுத்தும் வில்லைகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள நோயாளருக்கு மட்டுமு; இந்த மருந்து வில்லை வழங்க வேண்டும் என நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.
அத்துடன், மருத்துவ ஆலோசனைகளுடன் வீடுகளிலும் குறித்த வில்லைகளைப் பயன்படுத்த முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கொவிட் தொற்றுக்குள்ளாகும் ஒருவரை, வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலைக்கு கொண்டு செல்வதை, இந்த மருந்து தடுக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் கொவிட் மரணங்களை வெகுவாக தவிர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து வில்லையின் அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்துள்ள பின்னணியில், குறித்த மருந்துக்கான அனுமதிக்காக மார்க் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த மருந்து தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இறுதி தீர்மானமொன்று எட்டப்படும் என அமெரிக்க உணவு மற்றும் ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.