நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 112 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(15) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரைநாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை619, 073 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 20, 906 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
