கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?
இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது?
கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துமென கருதப்படுகிறது. இது சுகாதார பிரிவினர் மற்றும் நோயாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மற்றுமொரு கவலையான விடயமாகவுள்ளது. அதாவது நீரிழிவு நோய் அல்லது நாட்பட்ட பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதிலும் சிரமப்படுகிறார்கள. அத்துடன் இந்த நிலைமை காரணமாக தங்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
உலகம் முழுவதும் 463 மில்லியன் வயது வந்தோர் நீரிழிவு நோயாளர்களாக இருப்பதால், உலக நீரிழிவு தினமான நவம்பர் மாதம் 14ஆம் திகதியில் நீரிழிவு ஆதரவு சமூகங்கள் மற்றும் சுகாதார ஆலோசகர்கள் இந்த நோய் தொடர்பிலான தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை மென்மேலும் முன்னேற்றம் செய்வதற்கு ஒன்றிணைவதற்கான ஒரு முக்கியமான தருணமாக இதனைக் கருதினர். ஒரு தொற்றுநோயின் போது கவனிப்பின் தரம் மற்றும் நீரிழிவு நோயாளியை நிர்வகித்தல் போன்றவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் மாத்திரம் 10 பேரில் ஒருவர் இந்த நோயாள் பாதிக்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ‘Lockdown’ வாழ்க்கை முறையானது பெரும்பாலும்; ஒருவரை சுறுசுறுப்பாக இயங்க வைக்க வாய்ப்பில்லை, இதனால் ஆரோக்கியம் குறையும் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் நீரிழிவு நோய் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
Diabetes & Endocrinology சமீபத்தில் நடத்திய ஆய்வில், இங்கிலாந்தில் 61 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், கொவிட்-19ஆல் இறப்பவர்களில் 30% வீதமானோர் நீரிழிவு நோய் காரணமாகவே இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் நாட்பட்ட மருத்துவ நிலைமைகள் போன்ற காரணிகளை கணக்கிட்ட பிறகு, வைரஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மூன்று மடங்கு அதிகமாகவும், வகை 2க்கு கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் காட்டப்பட்டது.
இரண்டு முக்கியமான காரணங்களால் மோசமான குளுகோஸ் கட்டுப்பாட்டால் எமது உடல் அமைப்பில் பரவலான விளைவுகளை ஏற்படுத்துகிறது, இதனால் பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் தொடர்பான நோய்கள் மற்றும் மூட்டு நோயால் உடல் ஊனமாவதற்கு வழிவகுக்கும். உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்கள் வழியாக தேவையான ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு கொண்டுசெல்ல முடியாத அளவுக்கு பலவீனமடைகிறது. வீக்கம் என்பது நீரிழிவு கட்டுப்பாட்டின் மற்றுமொரு மோசமான விளைவாகும். இது வைரஸ் நோயின் தாக்குதலால் உடலை மோசமாக பாதிப்படையச் செய்யும். நீரிழிவு நோயுள்ள நோயாளர்களில் உயர்ந்த இரத்த குளுகோஸின் அளவு அதிகரித்தல், வைரஸ் தொற்று நோயாளர்களுக்கு அதிகப்படியான பக்டீரியா சிக்கல்களும் ஏற்படும். உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற இணை நோய்கள் போன்றவை வைரஸ் தொற்று நோய்களின் போது சிக்கல்களை அதிகரிக்கச் செய்யும் காரணிகளாகும்.
இரத்தத்திலுள்ள குளுகோஸின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அவற்றின் குளுகோஸ் அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு மருந்துகள் மற்றும் ஆரோக்கியமான உணவை சரியான உட்கொள்ளும் தினசரி பழக்கம், உங்கள் வீட்டின் எல்லைக்குள் உடற்பயிற்சித் திட்டத்தை பராமரித்தல், அதிகப்படியான வேலையைக் குறைத்தல் மற்றும் சிறந்த தூக்கம் ஆகிய காரணங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல நாடுகளிலுள்ள சுகாதார அமைச்சுக்களுக்கிடையே WHOஆல் நடத்தப்பட்ட துரிதமான மதிப்பீட்டு ஆய்வுகளின்படி, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது Nஊனுகளுக்கான சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள், கொவிட்-19 தொற்றுநோய்களின் போது NCD களுடன் வாழும் பலர் சரியான சிகிச்சை அல்லது மருந்துகளை எடுப்பதில்லை என்ற ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார வழங்குநர்களாக நாம், தேவையற்ற விதத்தில் மருத்துவமனைக்கு எமது நோயாளர்களை வரவழைத்து குழப்பத்தில் ஆழ்த்தாது, எம்மிடம் சிகிச்சை பெறும் அனைத்து நோயாளர்களும் அவர்களது சுகாதார தேவைகளுக்காக எமது குழுவினருடன் தொடர்பினை ஏற்படுத்தி மருந்து மற்றும் குளுக்கோ மீற்றர் மற்றும் இன்சூலின் போன்ற நீரிழிவு பராமரிப்பு தயாரிப்புக்களைப் பெற்றுக் கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, நோய்க்கான அறிகுறிகள் காணப்படும் போது அவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியரை அல்லது சுகாதார வழங்குநரை பார்வையிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பலர் மாரடைப்பு அல்லது தொற்றுநோய்களுடன் மருத்துவமனைக்கு தாமதமாக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தாமதமானது நோயாளியை மேலும் பலவீனமடையச் செய்யும்.
இலங்கையில், சுகாதார அமைச்சு தற்போது பல டெலிமெடிசின் சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் நீரிழிவு நோயாளர்கள் சன நெரிசலான இடங்களுக்கு பிரவேசிக்காமல் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் முறைகளை அறிமுகம் செய்துள்ளது.
Healthy Life Clinicஇல், தொற்றுநோயியல் பிரிவானது சுகாதார அமைச்சின் (MOH) விதிமுறைகளுக்கு அமைய அமைக்கப்பட்ட கொவிட்-19 பாதுகாப்பு செயற்பாட்டு சுகாதார நெறிமுறைகளை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுகின்றோம். சிகிச்சைகளுக்காக வரும் அனைத்து நோயாளர்களும் தொலைபேசியில் முன்பதிவு செய்யப்பட்டவுடன் அவர்களின் நோயின் தன்மையைப் புரிந்து கொள்ள எமது தாதியர்களால் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நோயாளியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனால் எங்களது கண்காணிப்பிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது.
எங்களது அனுபவம் வாய்ந்த, மிகவும் மதிக்கப்படும் ஆலோசகர் குழு, தொற்றுநோய் முழுவதையும் கண்காணித்து தொடர்ச்சியாக பராமரிக்க நிறுவப்பட்ட நம்பகமான டெலிமெடிசின் பங்குதாரர்களான oDoc மற்றும் Mydoctor.lk ஊடாக டெலி ஹெல்த் ஆலோசனைகளை வழங்குகின்றது. எங்களது நீண்டகால நீரிழிவு பராமரிப்பு மற்றும் எடை நிர்வகிப்பு நடவடிக்கைகளை ஒன்லைனிற்கு மாற்றியுள்ளோம். அவை நேரடியான சந்திப்பு மற்றும் பரிசோதனைகள் இல்லாத போதிலும் கூட பயனுள்ளதாக இருக்குமென நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.