கொஸ்லாந்த பகுதியில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு

பதுளை, ஹல்துமுல்ல பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையால் கொஸ்லாந்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், மகல்தெனிய மற்றும் மீரியபெத்த ஆகிய இரு தமிழ் பாடசாலைகளும் நாளை (16) மூடப்படும் என ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்துள்ளார்.

மேற்படி இரு பாடசாலைகள் நாளை மூடப்பட்டாலும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களை அருகில் உள்ள பாடசாலைகளுக்கு வரவழைத்து கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அதே பகுதியில் உள்ள ஆர்னோல்ட் தமிழ் வித்தியாலயம், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அங்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த பாடசாலையின் அதிபருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles