அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளே ஜனாதிபதியின் அழைப்பை இவ்வாறு நிராகரித்துள்ளன.
அத்துடன், அமைச்சு பதவிகளை துறந்து நாடகம் ஆடாமல், இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும் எனவும் மேற்படி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
” கோட்டா அரசின்கீழ் இடைக்கால அரசு மட்டுமல்ல, எந்த அரசு வந்தாலும் அதில் அங்கம் வகிக்க தமது கட்சி தயார் இல்லை.” என்று ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.