பசறை, நமுனுகுல ஊடாக பண்டாரவளை செல்லுகின்ற பிரதான பாதையை கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் கனவரல்ல தோட்ட மக்கள் மறித்து தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக வீதி மறியல் போராட்டத்தில் இந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கனவரல்ல தோட்ட ஏழு பிரிவுகளை சேர்ந்த தோட்ட மக்கள் இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று காலை முதல் இப்பாதை ஊடான போக்குவரத்து முழுமையாக தடை பட்டிருக்கிறது நமுனுகுல பொலிசார் ஆர்ப்பாட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு தொடர்ச்சியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீதியில் டயர்களை எரித்து கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
பாதை ஊடாக சுமார் நான்கு மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைபட்டு இருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.
மலர்வேந்தன், ராமு தனராஜ்
