கோழி இறைச்சி விலை குறையுமா?

கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான தீர்வு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles