‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் பாடசாலை மட்டத்திலும் கொண்டுவர அரசு தீர்மானம்!

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம் பிரதமரும் கல்வியமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இத் திட்டத்திற்கு தேவையான பயிற்சிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட கல்வித்துறைசார் அதிகாரிகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles