ஐக்கிய மக்கள் கூட்டணி உதயமானது ஊடக பிரசாரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கை என்ற தொனியில் விமர்சித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ.
“ ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பில் போட்டியிட்ட மனோ கணேசன் செய்தியாளர் சந்திப்பை நடாத்தி, தான் சஜித்துக்கு ஆதரவு என்கிறார்.
ஹக்கீம், ரிஷாட், இராதாகிருஷ்ணன், திகாம்பரம் போன்றவர்களும் சஜித் அணியில் ஒன்றாக இருந்து ஐக்கி மக்கள் சக்தி கூட்டணியில் நாடாளுமன்றம் வந்தவர்கள். இந்நிலையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளதுபோன்று செய்திகளை உருவாக்குகின்றனர்.
அதாவது ரணசிங்க பிரேமதாசவின் மனைவியும் சஜித்துக்கு ஆதரவு என்றுகூட விரைவில் செய்தி வரலாம். சஜித்தின் மனைவி கூட சஜித்துக்கு ஆதரவு எனவும் கூறலாம். இது நகைத்துவை தனமான செயற்பாடாகும்.” – எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
