சஜித்துக்கு நிபந்தனை அடிப்படையில் மு.கா. ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சி எடுக்க வேண்டிய தீர்மானங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டு, உயர்பீட உறுப்பினர்களின் கருத்துகள் கோரப்பட்டன.

இதன்அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது.

“ எம்மால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் சஜித்தின் வெற்றியை பாதிக்காது, அதேபோல சஜித்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களாக அவை அமையும்.” என்று மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி யாருக்கு ஆதரவு என்பதை ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாரம் அறிவிக்கவுள்ளது.

Related Articles

Latest Articles