சஜித் அணிக்கு 8 அமைச்சுகளை வழங்க ரணில் தயாராம்!

எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சி உள்ளடங்கிய அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 8 எம்.பி.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்த பதினைந்து நாட்களில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாகச் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பதவி ஏற்றார்.அதனை தொடர்ந்து 18 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவி ஏற்றது.இந்த அமைச்சரவையில் ஐ.ம.ச எம்.பிகள் இருவர் அமைச்சு பதவிகளை ஏற்றுள்ளனர்.இந்த நிலையில் ஏனைய ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பில் உள்ள கட்சிகள்,குழுக்களுக்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன் படி அவற்றுடன் இன்று முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதே வேளை சில எதிரணி எம்.பிகள் அமைச்சு பதவி ஏற்க தயாராவதாக அறிய வருகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles