ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்குரிய முயற்சி உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு முன்னதாக கைகூடாவிட்டாலும், இணைவுக்குரிய பேச்சுகள் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒன்றாக இணைந்து செயல்படுவதற்குரிய பேச்சுகளே இடம்பெறுகின்றன. ஓரிரு நாள்களுக்குள் அதற்குரிய வரைவு திட்டம் உருவாக்கப்படும். இரு தரப்புகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை இடம்பெறும். கூட்டணி கட்சிகளின் இணக்கமும் பெறப்படும்.
இணைவு என்பது தாதமதானால்கூட உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு பின்னரும் அது தொடரும். இந்த முயற்சி கைவிடப்படாது.” – என்றார்
