சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி பச்சைக்கொடி

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று, (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது.

இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த பிரேரணைகள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் போது அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபடபெந்தி, மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles