சட்டத்தை மாற்றியமைத்து பஸில் மீண்டும் வருவார் – மொட்டு கட்சி சூளுரை

” இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை நீக்கப்படலாம், சட்டத்திருத்தமொன்றை கொண்டுவருவதற்கான்மூலம் இதை செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை…” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி செயலாளர்  இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக உரிய நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமையை துறந்தார். இலங்கை பிரஜையாக தேர்தலில் போட்டியிட்டார். எனவே, தேவை ஏற்படின் உரிய நேரத்தில் பஸில் ராஜபக்சவும் தீர்மானம் எடுக்கலாம். துறப்பதா, இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

மொட்டு கட்சி என்பது பஸிலின் முழு பலத்தில் தங்கியிருக்கவில்லை. அவரும் எமக்கு மாபெரும் சக்தி.

இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு இந்நாட்டில் அரசியல் உரிமையை இல்லாது செய்வதற்கு நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு. அது சரியான முடிவு அல்ல. தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, எதிர்காலத்தில் மாற்றம் வரலாம்.

சட்டதிருத்தம் கொண்டுவந்து தடையை நீக்குவதற்கான மாற்றமாகவும் அது இருக்கலாம்…” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles