“சட்டம் என்பது அனைவருக்கும் சமம். அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் வெவ்வேறான சட்ட நடைமுறைகள் இருந்தாலும் அனைவரும் நாட்டிலுள்ள பொது சட்ட கட்டமைப்புக்கு கட்டுப்பட வேண்டும். அந்த சட்டமே உயரியது.” – என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
