ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பிக்குகள் போராட்டம்: நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள உத்தரவு!

கொழும்பு ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பிக்குகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.

நேற்று மாலை ஆரம்பமான இப்போராட்டம் இன்று காலை 2ஆவது நாளாக தொடர்ந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி கண்டியில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான பிக்குகளின் சுதந்திரத்துக்கான நடை பயணம் நேற்று கொழும்பை வந்தடைந்தது.

ஜனாதிபதி செயலக வளாகத்தக்கு முன்னால் திரண்ட பிக்குகள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர்.

Related Articles

Latest Articles